விஷம் குடித்து கல்லூரி மாணவி தற்கொலை
கொட்டாம்பட்டி அருகே விஷம் குடித்து கல்லூரி மாணவி தற்கொலை செய்து கொண்டார்.;
கொட்டாம்பட்டி,
கொட்டாம்பட்டி அருகே உள்ள கச்சிராயன்பட்டி மாங்குளப்பட்டியை சேர்ந்தவர் நடேசன். இவருடைய மகள் கோகிலா (வயது 19). மேலூரில் உள்ள அரசு கல்லூரியில் முதலாம் ஆண்டு ஆங்கிலம் படித்து வந்தார்.இந்த நிலையில் மாணவி கோகிலா கடந்த 5 மாதங்களாக மஞ்சள் காமாலையுடன் வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தார். இதனால் விரக்தி அடைந்த மாணவி வீட்டில் தனியாக இருந்த போது விஷம் குடித்து விட்டார். இதில் மயங்கி விழுந்த அவரை பெற்றோர் மீட்டு சிகிச்சைக்காக கருங்காலக்குடியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக மேலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று அவர் பரிதாபமாக இறந்தார்.இது குறித்து கொட்டாம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.