1,500 கிலோ ரேஷன் அரிசி கடத்தியவர் கைது

1,500 கிலோ ரேஷன் அரிசி கடத்தியவர் கைது செய்யப்பட்டாா்.

Update: 2022-03-19 20:45 GMT
அந்தியூர் அருகே உள்ள வேலம்பட்டி பகுதியில், ஈரோடு உணவு கடத்தல் தடுப்பு குற்ற புலனாய்வு பிரிவு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தங்கவேல் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக சந்தேப்படும்படியாக வந்த சரக்கு வாகனம் ஒன்றை போலீசார் தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். அதில் 1,500 கிலோ ரேஷன் அரிசி இருந்ததும், பர்கூர் வழியாக கர்நாடக மாநிலத்துக்கு கடத்தி செல்லப்படுவதும் தெரியவந்தது.
இதைத்தொடர்ந்து சரக்கு வாகனத்தை ஓட்டி வந்த பர்கூர் வேலம்பட்டி பகுதியை சேர்ந்த சிவலிங்கம் (வயது 42) என்பவரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து 1,500 கிலோ ரேஷன் அரிசி மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட வாகனத்தையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

மேலும் செய்திகள்