பொதுமக்களுக்கு இலவச வேட்டி, சேலை

கடையம் அருகே பொதுமக்களுக்கு இலவச வேட்டி, சேலை வழங்கப்பட்டது.

Update: 2022-03-19 20:21 GMT
கடையம்:
கடையம் அருகே ரவணசமுத்திரம் ரேஷன் கடையில் தமிழக அரசின் இலவச வேட்டி, சேலை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. பஞ்சாயத்து தலைவர் முகம்மது உசேன் தலைமை தாங்கி, பொதுமக்களுக்கு வேட்டி, சேலை வழங்கி தொடங்கி வைத்தார்.
கோவிந்தபேரி தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க செயலாளர் முத்து, பஞ்சாயத்து துணைத்தலைவர் ராமலட்சுமி, ரேஷன் கடை ஊழியர் மங்களம் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்