கல்லடை பழனியாண்டவர் சுவாமி வீதியுலா

பங்குனி உத்திரத்தையொட்டி கல்லடை பழனியாண்டவர் சுவாமி வீதியுலா நடைபெற்றது.

Update: 2022-03-19 20:12 GMT
தோகைமலை, 
தோகைமலை அருகே உள்ள கல்லடையில் பிரசித்தி பெற்ற பழனியாண்டவர் சுவாமி கோவில் உள்ளது. இந்த கோவிலில் பங்குனி உத்திரத்தையொட்டி நேற்று அதிகாலை சுவாமி வீதியுலா நடைபெற்றது. இதையொட்டி மூலவரான பாலதண்டாயுதபாணிக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் அதிகாலை 4 மணியளவில் அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் சுவாமி வீதியுலா வந்தார். அப்போது பக்தர்கள் பழம், தேங்காய் வைத்து பூஜை செய்தனர். இந்த வாகனம் கல்லடை முக்கிய வீதிகள் வழியாக சென்று கோவிலை வந்தடைந்தது. பின்னர் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனை நடைபெற்றது. இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பின்னர் அன்னதானம் வழங்கப்பட்டது.

மேலும் செய்திகள்