பஸ் மோதி பிளஸ்-2 மாணவர் உள்பட 2 பேர் பலியான பரிதாபம்

ஒரே மோட்டார் சைக்கிளில் சென்ற போது பஸ் மோதியதில் பிளஸ்-2 மாணவர் உள்பட 2 பேர் பலியானார்கள். மற்றொரு மாணவர் படுகாயம் அடைந்தார்.

Update: 2022-03-19 20:09 GMT
மேலூர்,

ஒரே மோட்டார் சைக்கிளில் சென்ற போது பஸ் மோதியதில் பிளஸ்-2 மாணவர் உள்பட 2 பேர் பலியானார்கள். மற்றொரு மாணவர் படுகாயம் அடைந்தார்.

பிளஸ்-2 மாணவர்கள்

மதுரை மாவட்டம் மேலூர் அருகே திருப்புவனம் ரோட்டில் உள்ள சுண்ணாம்பூரை சேர்ந்தவர் முருகேசன். இவருடைய மகன் அர்ச்சுனன் (வயது 20). வேன் டிரைவர். 
அதே ஊரை சேர்ந்த முனிச்சாமியின் மகன் உதயா (19). இவர்களின் நண்பர் சிவகங்கை மாவட்டம் பாப்பகுடி ஊராட்சி வெங்கட்டி கிராமத்தை சேர்ந்த வீரையாவின் மகன் ஸ்ரீகாந்த் (20).
இதில் உதயாவும், ஸ்ரீகாந்தும் திருப்புவனம் அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தனர். இந்த நிலையில் இவர்கள் 3 பேரும் சுண்ணாம்பூரில் இருந்து திருவாதவூர் நோக்கி ஒரே மோட்டார் சைக்கிளில் ெசன்றுள்ளனர்.

2 பேர் பலி

திருவாதவூர் சனீஸ்வர கோவில் அருகே சென்ற போது எதிரே வந்த அரசு டவுன் பஸ், ேமாட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் அர்ச்சுனன், ஸ்ரீகாந்த் ஆகிய 2 பேரும் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக இறந்தனர். உதயா படுகாயத்துடன் உயிருக்கு போராடினார். உடனே அக்கம், பக்கத்தினர் அவரை மீட்டு மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.
 இந்த விபத்து குறித்து மேலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்