கொங்கு ஒயிலாட்ட அரங்கேற்ற விழா

கொங்கு ஒயிலாட்ட அரங்கேற்ற விழாவில் கரூர் மேயர் நடனமாடினார்.

Update: 2022-03-19 20:09 GMT
கரூர், 
கொங்கு ஒயிலாட்டம் மற்றும் ஈசன் வள்ளி கும்மி குழுவினரின் அரங்கேற்ற விழா கரூரில் நேற்று நடைபெற்றது. இதற்கு மாநகராட்சி மேயர் கவிதா கணேசன், துணை மேயர் தாரணி சரவணன் ஆகியோர் தலைமை தாங்கி, குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்தனர். கொங்கு கல்வி அறக்கட்டளை தலைவர் அட்லஸ் நாச்சிமுத்து, ஆடிட்டர் நல்லசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கொங்கு கல்வி அறக்கட்டளை செயலாளர் விசா.சண்முகம் வரவேற்றார். தொடர்ந்து கொங்கு ஒயிலாட்டம் மற்றும் ஈசன் வள்ளி கும்மி அரங்கேற்றம் நடைபெற்றது. இதில் மேயர் கவிதா கணேசன் உள்பட 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு ஒயிலாட்டம் ஆடினர். இதில் கொங்கு ஒயிலாட்டம் மற்றும் ஈசன் வள்ளி கும்மி குழு ஒருங்கிணைப்பாளர் பழனிவேலு மற்றும் நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்