முஸ்லிம் அமைப்புகள் ஆர்ப்பாட்டம்
நாகர்கோவிலில் முஸ்லிம் அமைப்புகள் ஆர்ப்பாட்டம்நடத்தின;
நாகர்கோவில்,
நாகர்கோவிலில் முஸ்லிம் அமைப்புகள் ஆர்ப்பாட்டம்நடத்தின
கர்நாடகத்தில் பள்ளி-கல்லூரிகளில் முஸ்லிம் மாணவிகள் ஹிஜாப் அணிய தடை விதித்து கர்நாடக அரசு உத்தரவிட்டது. இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், அரசு உத்தரவு செல்லும் என்று கர்நாடக ஐகோர்ட்டு தீர்ப்பு கூறியது. இதை எதிர்த்து நாகர்கோவில் கோட்டார் அனைத்து ஜமாத்துகள் மற்றும் இஸ்லாமிய இயக்கங்கள் சார்பில் நேற்று நாகர்கோவில் இளங்கடையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
இதற்கு கூட்டமைப்பின் தலைவர் ரபீக் அஹமது பிர்தவுசி தலைமை தாங்கினார். மனிதநேய ஜனநாயக கட்சி மாவட்டத் துணைச் செயலாளர் அமீர்கான், எஸ்.டி.பி.ஐ. மாவட்ட தலைவர் சத்தார் அலி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழக மாவட்ட செயலாளர் அன்வர் சதாத், விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட துணைச் செயலாளர் தொல்காப்பியர், பச்சைத் தமிழகம் கட்சி நிறுவனர் உதயகுமார் மற்றும் ஏராளமான ஆண்கள், பெண்கள் கலந்து கொண்டனர்.
இதில் கோரிக்கையை வலியுறுத்தி கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டன. ஆர்ப்பாட்டத்தை முன்னிட்டு அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.