கொரோனா தடுப்பூசி முகாம்

கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது.

Update: 2022-03-19 19:59 GMT
நொய்யல், 
நொய்யல் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மெகா கொரோனா தடுப்பூசி முகாம் நேற்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற்றது. முகாமில் ஓலப்பாளையம் அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலர் தலைமையிலான குழுவினர் 18 வயதுக்கு மேற்பட்ட ஆண்கள் மற்றும் பெண்களுக்கு முதல் மற்றும் 2-ம் தவணை கொரோனா தடுப்பூசியை போட்டனர்.
அதேபோல் சுகாதாரத்துறை மருத்துவ குழுவினர் முகாமில் கலந்து கொள்ளாமல் வீட்டில் இருக்கும் பாலூட்டும் தாய்மார்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு நேரடியாக அவர்களது வீட்டிற்கு சென்று முதல் மற்றும் 2-ம் தவணை கொரோனா தடுப்பூசி போட்டனர்.

மேலும் செய்திகள்