ஏ.ஐ.டி.யு.சி.யினர் ஆர்ப்பாட்டம்
ஏ.ஐ.டி.யு.சி.யினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கரூர்,
மதுரையில் பணியில் இருந்த கண்டக்டரை தாக்கிய டிக்கெட் பரிசோதகர்களை கண்டித்து கரூர் மண்டல ஏ.ஐ.டி.யு.சி. சார்பில் திருமாநிலையூரில் உள்ள போக்குவரத்து பணிமனை முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு மண்டல தலைவர் செல்வராஜ் தலைமை தாங்கினார். இதில் பொதுச்செயலாளர் விஜயகுமார், பொருளாளர் சக்திவேல் உள்பட பலர் கலந்து கொண்டு கோஷங்களை எழுப்பினர்.