விநாயகர் கோவில் வருசாபிஷேகம்

அம்பை அரசு ஆஸ்பத்திரி அருகே அமைந்துள்ள விநாயகர் கோவிலில் வருசாபிஷேக விழா நடந்தது.

Update: 2022-03-19 19:44 GMT
அம்பை:
அம்பாசமுத்திரம் அரசு மருத்துவமனை எதிரில் அமைந்துள்ள  அரசரடி விநாயகர் கோவில் வருசாபிஷேகம் நேற்று நடைபெற்றது. இதையொட்டி நேற்று முன்தினம் மங்கள இசை, விக்னேஸ்வர பூஜை, 108 கலச பூஜை, 1,008 சங்கு பூஜையுடன் மகா கணபதி ஹோமம், தீபாராதனை நடைபெற்றது.
நேற்று அதிகாலை 5 மணிக்கு மேல் மங்கள இசையுடன் 2-ம் கால பூஜைகள் நடைபெற்று, தொடர்ந்து காலை 9 மணிக்கு மேல் மூலவர் மற்றும் விமானத்திற்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தது. தொடர்ந்து விநாயகருக்கு சிறப்பு அலங்காரத்தில் தீபாராதனைகள் செய்யப்பட்டது. நிகழ்ச்சியில் அம்பை பகுதியை சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்