ஊருணியில் மூழ்கி தொழிலாளி பலி
சிவகாசி அருகே ஊருணியில் மூழ்கி தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்தார்.;
சிவகாசி,
சிவகாசி அருகே உள்ள மங்கலம் கிராமத்தை சேர்ந்த பால்சாமி மகன் வீரசின்னு (வயது 27). கட்டிட ெதாழிலாளி. இந்த நிலையில் வீரசின்னு தனது ஊரில் உள்ள ஊருணிக்கு குளிக்க சென்றார். நீண்ட நேரம் ஆகியும் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் வீரசின்னுவை பல இடங்களில் தேடினர். ஆனால் அவரை பற்றி எந்த தகவலும் கிடைக்கவில்லை. இந்த நிலையில் ஊருணி கரையின் மீது அவர் அணிந்து இருந்த ஆடைகள் இருந்தது. இதனால் சந்தேகம் அடைந்த ஊர் மக்கள் சிவகாசி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.
அதன் பேரில் தீயணைப்பு வீரர்கள் ஊருணியில் இருந்து வீரசின்னு உடலை மீட்டனர். இதுகுறித்து அவரது தாய் தவமணி எம்.புதுப்பட்டி போலீசில் புகார் கொடுத்தார். அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். குளிக்க சென்ற தொழிலாளி நீரில் மூழ்கி இறந்திருக்கலாம் என போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் தெரியவந்தது.