வனப்பகுதியில் அழுகிய நிலையில் வாலிபர் பிணம்

மணப்பாறை,மார்ச்.20-
மணப்பாறையை அடுத்த வீரமலையில் 33 வயதுமதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் அழுகிய நிலையில் பிணமாக கிடந்தார். தகவல் அறிந்த வையம்பட்டி போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில் இறந்தவர் கரூர் மாவட்டம், கொசூர் அருகே உள்ள உப்பிலியபட்டியை சேர்ந்த சந்திரசேகர் (33) என்றும், தோகைமலை போலீஸ் நிலையத்தில் மாயமானதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் மலைப்பகுதியில் அழுகிய நிலையில் இறந்து கிடந்தது தெரியவந்தது. இந்தசம்பவம் தொடர்பாக வையம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.