மெகா முகாமில் 26 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி

திருச்சி,மார்ச்.20-
திருச்சி மாவட்டத்தில் நேற்று கொரோனா மெகா தடுப்பூசி சிறப்பு முகாம் நடைபெற்றது. ஊரகப் பகுதிகளில் 271 முகாம்கள் மற்றும் நகர்புற பகுதிகளில் 200 முகாம்களில் மொத்தம் 471 சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டன. மாவட்டம் முழுவதும் 26 ஆயிரத்து 6 பேருக்கு கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டது. இதில் கோவிஷீல்டு மற்றும் கோவேக்சின் முதல் டோஸ், 2-வது டோஸ் மற்றும் பூஸ்டர் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டன. மேலும் 12 வயது முதல் 14 வயதுக்குட்பட்ட 1,118 சிறுவர்களுக்கு கோர்பேவேக்ஸ் முதல் தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டது. இந்த தகவலை திருச்சி மாவட்ட கலெக்டர் சிவராசு தெரிவித்தார்.