என்ஜினீயரிங் மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை

சேலம் அருகே என்ஜினீயரிங் மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2022-03-19 19:01 GMT
சேலம்:-
சேலம் அருகே என்ஜினீயரிங் மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
என்ஜினீயரிங் மாணவர்
சேலம் அருகே உள்ள வாய்க்கால்பட்டறை பகுதியை சேர்ந்தவர் ராஜமாணிக்கம். ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். அவருடைய மகன் பார்த்தசாரதி (வயது 17). இவர் சேலத்தில் உள்ள ஒரு தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் பி.இ. முதலாமாண்டு படித்து வந்தார்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு பார்த்தசாரதி வீட்டில் உள்ள ஒரு அறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதை கண்டு அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் அவருடைய உடலை பார்த்து கதறி அழுதனர். இதுகுறித்து தகவல் அறிந்ததும் வீராணம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர்.
வீட்டின் மீது கடன்
பின்னர் மாணவரின் உடலை போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 
போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், ராஜமாணிக்கம் தனது வீட்டின் மீது கடன் வாங்கியதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக பார்த்தசாரதி தந்தையிடம் கேட்டுள்ளார். அப்போது அவர் மகனை திட்டியதாக தெரிகிறது. இதனால் மனமுடைந்து பார்த்தசாரதி தற்கொலை செய்து கொண்டது தெரியவந்துள்ளது. இருந்தாலும் மாணவன் தற்கொலைக்கு வேறு காரணம் ஏதும் உள்ளதா? என போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
=======

மேலும் செய்திகள்