மதுபாட்டில்கள் விற்றவர் கைது
பெண்ணாடத்தில் மதுபாட்டில்கள் விற்றவரை போலீசார் கைது செய்தனர்.
பெண்ணாடம்,
பெண்ணாடம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தீபன் தலைமையிலான போலீசார் பெண்ணாடம் பகுதியில் தீவிர ரோந்து பணியில் இருந்தனர். அப்போது சிலுப்பனூர் சாலை அருகே சந்தேகத்துக்கிடமாக நின்று கொண்டிருந்தவரை பிடித்து விசாரணை செய்தனர்.
விசாரணையில் அவர் பெண்ணாடம் வடக்கு ரத வீதியை சேர்ந்த தியாகராஜன் மகன் பாலகிருஷ்ணன்(வயது 49) என்பதும், மதுபாட்டில்களை விற்பனை செய்ததும் தெரியவந்தது. இதையடுத்து பாலகிருஷ்ணனை கைதுசெய்த போலீசார் அவரிடம் இருந்து 4 மது பாட்டில்களையும் பறிமுதல் செய்தனர்.