மாநில அளவிலான சிலம்ப போட்டி: அன்னவாசல் அரசு மேல்நிலைப்பள்ளி முதலிடம்
மாநில அளவிலான சிலம்ப போட்டியில் அன்னவாசல் அரசு மேல்நிலைப்பள்ளி முதலிடம் பெற்றது.
அன்னவாசல்:
இலுப்பூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் மாநில அளவிலான சிலம்ப போட்டி நடைபெற்றது. இதில் பல்வேறு பகுதிகளில் இருந்து பள்ளி மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர். இதில் அன்னவாசல் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் விமலாபதி, கோபிகா நடேசபால், தருண், சரண் உள்ளிட்ட மாணவர்கள் விளையாடி முதலிடம் பெற்றனர். அவர்களை பள்ளி தலைமை ஆசிரியர், உதவி தலைமை ஆசிரியர் மற்றும் உடற்கல்வி இயக்குனர் உள்ளிட்டோர் பாராட்டினர்.