கர்ப்பிணிகளுக்கு தடுப்பூசி முகாம்

சேத்திரபாலபுரம் ஊராட்சியில் கர்ப்பிணிகளுக்கு தடுப்பூசி முகாம் நடந்தது.

Update: 2022-03-19 18:22 GMT
குத்தாலம்:
குத்தாலம் அருகே சேத்திரபாலபுரம் ஊராட்சி கிராம நிர்வாக அலுவலர் அலுவலகத்தில் 45 நாள் முதல் 1½ வயதுடைய குழந்தைகள் மற்றும் கர்ப்பிணி பெண்களுக்கு தடுப்பூசி முகாம் சுகாதாரத்துறை சார்பில் நடந்தது.
 இதில் கிராம சுகாதார செவிலியர் மீனாட்சி கலந்துகொண்டு குழந்தைகள் மற்றும் கர்ப்பிணி பெண்களுக்கு தடுப்பூசி செலுத்தினார் இதில் சேத்திரபாலபுரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த குழந்தைகள் மற்றும் கர்ப்பிணி பெண்கள் கலந்து கொண்டு தங்களுக்கு தடுப்பு ஊசி செலுத்தி கொண்டனர்.

மேலும் செய்திகள்