அரசு பள்ளி மாணவர்களுக்கு குடற்புழு நீக்க மாத்திரை

அரசு பள்ளி மாணவர்களுக்கு குடற்புழு நீக்க மாத்திரை வழங்கப்பட்டது.

Update: 2022-03-19 18:20 GMT
அன்னவாசல்:
தேசிய குடற்புழு நீக்கதிட்டத்தின் கீழ் பள்ளி மாணவ-மாணவிகளுக்கு குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்கப்பட்டு வருகிறது. அதன் தொடர்ச்சியாக அன்னவாசல் அருகே உள்ள கிளிக்குடி அரசு உயர் நிலைப்பள்ளியில் பள்ளி தலைமையாசிரியர் செந்தில்முருகன் தலைமையில் நடந்த நிகழ்ச்சியில் 6-ம் வகுப்பிலிருந்து 10-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்கப்பட்டன. அப்போது பசியின்மை, ரத்தசோகை, குமட்டல், வயிற்று வலி, வயிற்றுப்போக்கு, ஊட்டச்சத்து குறைபாடு போன்ற பாதிப்புகள் ஏற்படக்கூடும். எனவே குடற்புழுநீக்க மாத்திரையை 6 மாதத்திற்கு ஒருமுறை அனைவரும் எடுத்துக் கொள்ள வேண்டும். மேலும் வாரம் ஒருமுறை சாப்பிடும் இரும்புசத்து மாத்திரையின் பயன்கள் குறித்தும் மாணவர்களிடம் எடுத்துக் கூறப்பட்டது. இதில் அரசு மருத்துவமனை செவிலியர்கள், ஆசிரியர்கள், மாணவ-மாணவிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்