ராசிபுரம் அருகே கட்டிலில் படுத்திருந்தபோது போர்வையில் தீப்பிடித்து முதியவர் பலி

ராசிபுரம் அருகே கட்டிலில் படுத்திருந்தபோது போர்வையில் தீப்பிடித்து முதியவர் பலியானார்.

Update: 2022-03-19 18:07 GMT
ராசிபுரம்:
ராசிபுரம் அருகே உள்ள முத்துக்காளிப்பட்டி ஆதிதிராவிடர் காலனியை சேர்ந்தவர் வரதன் (வயது 70). வீட்டில் தனியாக வசித்து வந்த அவர், நேற்று முன்தினம் விறகு அடுப்பில் சமையல் செய்து கொண்டிருந்தார். பின்னர் கட்டிலில் படுத்திருந்தபோது, திடீரென அடுப்பில் இருந்த தீ போர்வையில் பற்றியது. அவர் மீதும் தீ பற்றிய நிலையில் வரதன் சம்பவ இடத்திலேயே உடல் கருகி பலியானார். போலீசார் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ராசிபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்