கந்தம்பாளையம் அருகே மன்மதன் கோவிலில் காமன் பண்டிகை
கந்தம்பாளையம் அருகே மன்மதன் கோவிலில் காமன் பண்டிகை நடந்தது.
கந்தம்பாளையம்:
கந்தம்பாளையம் அருகே உள்ள கருந்தேவம்பாளையம் மன்மதன் கோவிலில் காமன் பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி கடந்த 6-ந் தேதி கம்பம் நடுதலுடன் விழா தொடங்கியது. இதைத்தொடர்ந்து மன்மதன், ரதிதேவி திருக்கல்யாணம், காமதகனம் நடந்தது. இதையடுத்து பொங்கல் வைத்தல், மாவிளக்கு படைத்தல், காமனை எழுப்புதல் நிகழ்ச்சியும் நடத்தப்பட்டன. நேற்று அதிகாலை பட்டாபிஷேகம் நடந்தது. பின்னர் ஈஸ்வரன் வேடமணிந்தவர்களிடம், பிள்ளை பாக்கியம் வேண்டியும், நினைத்த காரியங்கள் நடைபெறவும் ஏராளமான பெண்கள் மடிப்பிச்சை எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். தொடர்ந்து அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவில் கருந்தேவம்பாளையம், கந்தம்பாளையம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவுக்கான ஏற்பாடுகளை விழாக்குழுவினர் செய்திருந்தனர்.