பிளஸ்-2 மாணவியை ஆபாசமாக திட்டியதாக தம்பதி உள்பட 3 பேர் கைது

பிளஸ்-2 மாணவியை ஆபாசமாக திட்டியதாக தம்பதி உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2022-03-19 18:05 GMT
எலச்சிப்பாளையம்:
திருச்செங்கோட்டை சேர்ந்தவர் இளநீர் வியாபாரி. இவரது பக்கத்து வீட்டில் பிளஸ்-2 மாணவி வசித்து வருகிறார். சம்பவத்தன்று இளநீர் வியாபாரி குடும்பத்துக்கும், பிளஸ்-2 மாணவி குடும்பத்துக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. அப்போது மாணவியை இளநீர் வியாபாரியின் குடும்பத்தினர் ஆபாசமாக திட்டியதாக கூறப்படுகிறது. இதுகுறித்த புகாரின் பேரில் திருச்செங்கோடு டவுன் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து இளநீர் வியாபாரி, இவருடைய மனைவி மற்றும் 18 வயதான மகனை கைது செய்தனர். இதேபோல் இளநீர் வியாபாரி கொடுத்த புகாரின் பேரில் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார் மாணவியின் தந்தையை கைது செய்தனர்.

மேலும் செய்திகள்