கலவை காரீசநாதர் கோவிலில் திருக்கல்யாணம்
கலவை காரீசநாதர் கோவிலில் திருக்கல்யாணம் நடந்தது.
கலவை
ராணிப்பேட்டை மாவட்டம் கலவையில் உள்ள தர்ம சம்வர்த்தினி சமேத காரீச நாதர் கோவிலில் பங்குனி உத்திர பிரம்மோற்சவ விழாவின் 5-ம் நாளில் திருக்கல்யாணம் நடைபெற்றது. முன்னதாக காலையில் சிறப்பு அபிஷேகம் நடந்தது. மாலையில் சோமஸ்கந்தர் அலங்காரத்துடன் திருக்கல்யாணம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர். திருமண பகவானுக்கு ஜம்பர் பேட்டையில் ஊஞ்சலாடி விழாவும் நடைபெற்றது.
கலவை நகர வீதியில் சிவனடியார் தொண்டர்கள் மூலமாக செண்டை மேளம், வாணவேடிக்கையுடன் பஞ்ச மூர்த்திகள் வீதி உலாவும் நடந்தது.