ஆம்பூரில் அனைத்து இஸ்லாமிய அமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம்
ஆம்பூரில் அனைத்து இஸ்லாமிய அமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஆம்பூர்
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் சார்பதிவாளர் அலுவலகம் அருகில் இஸ்லாமிய அனைத்து கூட்டமைப்பு மற்றும் சமூக ஆர்வலர்கள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்கள், இஸ்லாமிய மாணவிகள் ‘ஹிஜாப்’ அணிந்துவர தடை விதித்த கர்நாடக அரசையும் மற்றும் கர்நாடக ஐகோர்ட்டு அளித்த தீர்ப்பையும் கண்டித்து கோஷங்களை எழுப்பினர்.
இதில், இஸ்லாமிய அனைத்து கூட்டமைப்பு நிர்வாகிகள் மற்றும் பலர் கலந்துகொண்டனா்.