வாகனம் மோதி கர்ப்பிணியுடன் கணவர் பலி

மேல்மலையனூர் அருகே வாகனம் மோதி கர்ப்பிணியுடன் கணவர் பலியானார்.

Update: 2022-03-19 17:21 GMT
மேல்மலையனூர், 

திருவண்ணாமலை மாவட்டம் ஆத்துறை கிராமத்தை சேர்ந்தவர் சாமிக்கண்ணு மகன் சக்தி(வயது 35). விவசாயி. இவருடைய மனைவி சுகன்யா(27). இந்த தம்பதிக்கு சிவேனஷ்(1) என்ற மகன் இருக்கிறான்.
இந்த நிலையில் சுகன்யா மீண்டும் கர்ப்பமானார். 4 மாத கர்ப்பிணியான இவரும், சக்தியும் மருந்து வாங்குவதற்காக விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் அருகே உள்ள எதப்பட்டு கிராமத்துக்கு மோட்டார் சைக்கிளில் வந்தனர். 

வாகனம் மோதி பலி 

அங்குள்ள ஒரு மெடிக்கல்லில் மருந்து வாங்கிக்கொண்டு மீண்டும் வீட்டிற்கு மோட்டார் சைக்கிளில் புறப்பட்டனர். எதப்பட்டு அர்ச்சுனன் என்பவரது நிலத்தின் அருகே சென்றபோது, அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம், எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது. 
இதில் தூக்கி வீசப்பட்டதில் சக்தி, சுகன்யா ஆகிய இருவரும் சாலையோர பள்ளத்தில் விழுந்து, பலியானார்கள். விபத்துக்கு காரணமான அந்த வாகனம் நிற்காமல் வேகமாக சென்றது. 

போலீசார் விசாரணை 

இது குறித்து அப்பகுதி மக்கள், அவலூர்பேட்டை போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் விஸ்வநாத், தனிப்பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் அக்தர் பாஷா மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று இருவரது உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செஞ்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். 
மேலும் இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். வாகனம் மோதி கர்ப்பிணியுடன் கணவரும் பலியானதால் அந்த கிராமமே சோகத்தில் மூழ்கி உள்ளது. 

மேலும் செய்திகள்