ஜோலார்பேட்டை பகுதியில் விபசாரத்தில் ஈடுபட்ட பெண் உள்பட 6 பேர் கைது

ஜோலார்பேட்டை பகுதியில் விபசாரத்தில் ஈடுபட்ட பெண் உள்பட 6 பேர் கைது செய்யப்பட்டனர்.;

Update: 2022-03-19 17:21 GMT
ஜோலார்பேட்டை

ஜோலார்பேட்டையை அடுத்த பால்நாங்குப்பம் அருகே ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து, அங்கு விபசாரம் நடப்பதாக ஜோலார்பேட்டை போலீசுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இன்ஸ்பெக்டர் மங்கையர்கரசி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று வீட்டில் சோதனை செய்தனர். 

வீட்டில் ஒரு பெண்ணும், ஆணும் பாலியல் தொழில் நடத்தி வந்ததும், அவர்களை தவிர வாடிக்கையாளராக வந்த 4 ஆண்களையும் போலீசார் கைது செய்தனர். குடும்ப வறுமையால் விபசாரத்தில் ஈடுபட வந்த 2 பெண்களை போலீசார் மீட்டனர்.

அவர்களிடம் நடத்திய விசாரணையில் 3 மாதங்களுக்கு முன்பு பால்நாங்குப்பம் அருகே ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்துள்ளனர். அங்கு 2 நாட்களாக விபசாரம் நடந்துள்ளது. அவர்கள் 2 மாதங்களுக்கு ஒருமுறை வீடுகளை மாற்றி பல்வேறு பெண்களை விபசாரத்தில் ஈடுபடுத்தி வந்ததாக கூறினர். அவர்களை போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்த உள்ளனர்.

மேலும் செய்திகள்