சிறைமீட்ட அய்யனார் கோவிலில் பங்குனி உத்திர திருவிழா

உம்பளச்சேரி சிறைமீட்ட அய்யனார் கோவிலில் பங்குனி உத்திர திருவிழா நடந்தது.;

Update: 2022-03-19 17:07 GMT
வாய்மேடு:
 தலைஞாயிறை அடுத்த உம்பளச்சேரியில் சிறைமீட்டஅய்யனார் கோவில் உள்ளது. பல்வேறு சிறப்புகள் பெற்ற இந்த கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி உத்திர திருவிழா நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு திருவிழா நேற்று முன்தினம் யாகசாலை பூஜைகளுடன் தொடங்கியது. தொடர்ந்து பக்தர்கள் பால்குடம் எடுத்து வந்து அய்யனாருக்கு அபிஷேக, ஆராதனை செய்யப்பட்டது. பின்னர் யாக சாலையில் வைத்து பூஜிக்கப்பட்ட புனிதநீர் அடங்கிய கலசங்களை சிவாச்சாரியார்கள் எடுத்து சென்று சாமிக்கு அபிஷேகம் நடந்தது. இதை தொடர்ந்து  பூர்ணா, புஷ்கலாபிகா, சிறைமீட்ட அய்யனாருக்கு சந்தனக்காப்பு அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதை தொடர்ந்து சாமி வீதி உலா நடந்தது.  இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை கோவில் குருக்கள் தமிழ்தாசன் மற்றும் கிராமமக்கள் செய்திருந்தனர். 

மேலும் செய்திகள்