வாணியம்பாடியில் ரெயிலில் கடத்த முயன்ற 2 டன் ரேஷன் அரிசி பறிமுதல்

ரெயிலில் கடத்த முயன்ற 2 டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.

Update: 2022-03-19 16:58 GMT
ஜோலார்பேட்டை

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி ரெயில் நிலையத்தில் ஜோலார்பேட்டை ரெயில்வே பாதுகாப்பு படை இன்ஸ்பெக்டர் மணிமாறன் தலைமையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது இரண்டாவது மற்றும் மூன்றாவது பிளாட்பாரங்களில் மறைவான பகுதிகளில் சிறுசிறு மூட்டைகளாக ரெயில் மூலம் வெளி மாநிலங்களுக்கு கடத்துவதற்காக மர்ம நபர்கள் ரேஷன் அரிசியை பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது.

அங்கிருந்த 2 டன் ரேஷன் அரிசியை போலீசார் பறிமுதல் செய்து வாணியம்பாடி வட்ட வழங்கல் அலுவலர் சிலம்பரசனிடம்  ஒப்படைத்தனர்.
மேலும் ரெயில் மூலம் ரேஷன் அரிசியை கடத்துவதற்காக பதுக்கி வைத்திருந்த மர்ம நபர்கள் குறித்து ஜோலார்பேட்டை ரெயில்வே பாதுகாப்பு படை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


மேலும் செய்திகள்