பாலக்கோடு அருகே செம்மண் கடத்திய லாரி பறிமுதல்

பாலக்கோடு அருகே செம்மண் கடத்திய லாரி பறிமுதல் செய்யப்பட்டது.

Update: 2022-03-19 16:58 GMT
பாலக்கோடு:
பாலக்கோடு அருகே உள்ள அ.மல்லாபுரம் குஜ்ஜாரஅள்ளி பிரிவு ரோட்டில் தாசில்தார் பாலமுருகன் மற்றும் வருவாய்த்துறையினர் ரோந்து சென்றனர். அப்போது அந்த வழியாக வந்த டிப்பர் லாரியை நிறுத்தி சோதனை செய்தபோது செங்கல் சூளைக்கு அனுமதியின்றி செம்மண் கடத்தியது தெரிந்தது. இதையடுத்து தாசில்தார் லாரியை பறிமுதல் செய்த, பாலக்கோடு போலீசில் ஒப்படைத்தார். இதுதொடர்பாக போலீசார், செம்மண் கடத்திய மாதேஷ் (வயது35), நவநீதன் (40) ஆகிய 2 பேர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்