ஒகேனக்கல் காவிரி ஆற்றில் அடித்து செல்லப்பட்ட கார் டிரைவர் உடல் கரை ஒதுங்கியது

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் அடித்து செல்லப்பட்ட கார் டிரைவர் உடல் கரை ஒதுங்கியது.

Update: 2022-03-19 16:57 GMT
பென்னாகரம்:
ஒகேனக்கல் காவிரி ஆற்றில் அடித்து செல்லப்பட்ட கார் டிரைவர் உடல் கரை ஒதுங்கியது.
கார் டிரைவர்
வேலூர் மாவட்டம் கம்மவான்பேட்டையை சேர்ந்தவர் கவுதம் (வயது 33). கார் டிைரவர். இவர் நேற்று முன்தினம் அதே பகுதியை சேர்ந்த நண்பர்கள் முரளி, மாதவன், செல்வா, நாராயணன் ஆகியோருடன் தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல்லுக்கு காரில் சுற்றுலா வந்தார். ஒகேனக்கல் முதலைப்பண்ணை அருகில் காவிரி ஆற்றில் நண்பர்கள் குளித்தபோது கவுதம் காவிரி ஆற்றில் தண்ணீரில் அடித்து செல்லப்பட்டார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த நண்பர்கள் அவரை காப்பாற்ற முயன்றும் முடியவில்லை. இதுகுறித்து தகவல் அறிந்ததும் ஒகேனக்கல் போலீசார் மற்றும் தீயணைப்பு படையினர் வந்து கவுதமை தேடி தேடியும் கிடைக்கவில்லை. மேலும் இருள் சூழ்ந்ததால் தேடும் பணி நிறுத்தப்பட்டது.
உடல் மீட்பு
இந்தநிலையில் நேற்று 2-வது நாளாக போலீசார், பரிசல் ஓட்டிகள், மீனவர்கள் உதவியுடன் கவுதமை தேடினர். அப்போது முதலைப்பண்ணையில் இருந்து 50 மீட்டர் தூரத்தில் அவரது உடல் கரை ஒதுங்கியது. இதையடுத்து போலீசார் விரைந்து சென்று அவரது உடலை மீட்டு பென்னாகரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். 
பின்னர் பிரேத பரிசோதனைக்கு பிறகு அவரது உடல் குடும்பத்தினரிடம் ஒப்படைத்தனர். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்