கம்பைநல்லூர் அருகே சிறுவன் தூக்குப்போட்டு தற்கொலை

கம்பைநல்லூர் அருகே சிறுவன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டான்.

Update: 2022-03-19 16:57 GMT
மொரப்பூர்:
கம்பைநல்லூர் அருகே உள்ள கொன்றம்பட்டி கிழக்கு வட்டம் பகுதி சேர்ந்த சிவக்குமார். இவரது மகன் லோக்நாத் (வயது 17). இவர் பள்ளி படிப்பை பாதியில் நிறுத்தி விட்டு வீட்டில் இருந்துள்ளார். இவர் கடந்த 17-ந் தேதி  வீட்டில் தூக்கில் தொங்கினார். இதை கண்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் லோக்நாத்தை மீட்டு கம்பைநல்லூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அனுப்பி வைத்தனர். டாக்டர்கள் பரிசோதித்தபோது சிறுவன் ஏற்கனவே இறந்துவிட்டது தெரியவந்தது. இதுகுறித்து கம்பைநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரனை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்