ஆற்காட்டில் வாகனம் மோதி தொழிலாளி பலி

ஆற்காட்டில் வாகனம் மோதி தொழிலாளி பலியானார்.

Update: 2022-03-19 16:57 GMT
ஆற்காடு

ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு பூபதி நகர் பகுதியில்  அடையாளம் தெரியாத வாகனம் மோதி ஒருவர் இறந்து கிடப்பதாக ஆற்காடு டவுன் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆற்காடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இறந்த நபர் யார் என விசாரணை செய்தனர். விசாரணையில் இறந்தவர் ஆற்காடு டிரஸ்ஸர்தோட்டம் பகுதியை சேர்ந்த ராஜேந்திரன் (வயது 59), கூலி தொழிலாளி என்பது தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விபத்தை ஏற்படுத்தி விட்டு நிற்காமல் சென்ற வாகனம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்