கொடைக்கானல் அருகே தனியார் தோட்டத்தில் தீ
கொடைக்கானல் அருகே தனியார் தோட்டத்தில் தீ கொழுந்து விட்டு எரிந்தது.;
கொடைக்கானல்:
கொடைக்கானல் பகுதியில் பகல் நேரத்தில் நிலவி வரும் வெப்பம் காரணமாக அடிக்கடி தீ விபத்து ஏற்பட்டு வருகிறது. இதனால் கொடைக்கானல் வட்டாரத்தில் பல்வேறு பகுதிகள் புகை மண்டலமாக காட்சியளிக்கிறது. இதனிடையே நேற்று காலை கொடைக்கானல் அருகே வில்பட்டி கிராமத்தை சேர்ந்த மெத்து பகுதியில் தனியார் தோட்டத்தில் திடீரென தீ கொழுந்து விட்டு எரிந்தது. இந்த தீ அருகிலுள்ள வருவாய்த்துறை நிலங்களுக்கும் பரவ தொடங்கியது. இதுகுறித்து தகவலறிந்ததும் வனத்துறையினர் விரைந்து சென்று தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தனர். மேலும் தனியார் தோட்டத்தில் தீ வைத்தவர்களை வனத்துறையினர் தேடி வருகின்றனர்.
இதனிடையே தீ காரணமாக அந்த பகுதி முழுவதும் வெகுநேரம் புகைமண்டலமாக காட்சியளித்தது.