பிரதம மந்திரியின் வீடு கட்டும் திட்டத்தில் நிலுவையில் உள்ள வீடுகளை விரைந்து கட்டி முடிக்க வேண்டும் அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவு

பிரதம மந்திரியின் வீடு கட்டும் திட்டத்தில் நிலுவையில் உள்ள வீடுகளை விரைந்து கட்டி முடிக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு கலெக்டர் பாலசுப்பிரமணியம் உத்தரவிட்டார்;

Update: 2022-03-19 16:46 GMT

கம்மாபுரம்

கலெக்டர் ஆய்வு

கம்மாபுரம் ஒன்றியத்துக்குட்பட்ட சேப்ளாநத்தம் வடக்கு பகுதியில் பிரதம மந்திரியின் வீடு கட்டும் திட்டத்தின் மூலம் கட்டப்படும் வீடுகளை கடலூர் மாவட்ட கலெக்டர் பாலசுப்பிரமணியம் ஆய்வு செய்தார். தொடர்ந்து ஒருங்கிணைந்த ஆண்கள் சுகாதார வளாகம் புனரமைப்பு பணி, நடுநிலைப்பள்ளியில் மழை நீர் சேகரிப்பு தொட்டி, ஊத்தங்கால் கிராமத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைத்திட்டத்தின் கீழ் கட்டப்படும் அங்கன்வாடி கட்டிடம், பொன்னாலகரம் கிராமத்தில் ஜல் ஜீவன் மிஷன் திட்டம், கம்மாபுரத்தில் நர்சரி அமைக்கும் பணி ஆகியவற்றையும் கலெக்டர் பார்வையிட்டார்.

அதிகாரிகளுக்கு உத்தரவு

பின்னர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஊராட்சி மன்ற தலைவர்களுக்கான ஆய்வு கூட்டம் கலெக்டர் பாலசுப்ரமணியம் தலைமையில் நடைபெற்றது. இதில் பிரதம மந்திரியின் வீடுகள் கட்டும் திட்டத்தின் மூலம் கட்டப்படும் நிலுவையில் உள்ள வீடுகளை விரைந்து முடிக்க கலெக்டர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். 
இதில் கூடுதல் கலெக்டர் பவன்குமார் ஜி கிரியப்பனவர், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் இந்திராதேவி, காமராஜ், ஊராட்சி மன்ற தலைவர் வளர்மதி ராஜசேகரன், என்ஜினீயர் சங்கர் உள்ளிட்ட அதிகாரிகள், உள்ளாட்சி அமைப்பின் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.

மேலும் செய்திகள்