பக்தரிடம் செல்போன், பணம் திருட்டு

மயிலத்தில் பக்தரிடம் செல்போன், பணம் திருடு போனது.

Update: 2022-03-19 16:38 GMT
மயிலம், 

சென்னை அம்பத்தூர் திருவள்ளுவர் நகர் பகவத்சிங் தெருவை சேர்ந்தவர்  ஜெகநாதன்(வயது 47). இவர் மயிலம் முருகன் கோவிலுக்கு வந்திருந்தார். அங்கு பையை கரையில் வைத்து விட்டு தெப்பக்குளத்தில் குளித்தார். பின்னர் வந்து பார்த்தபோது பையில் வைத்திருந்த 2 செல்போன்கள் மற்றும் ரூ.8 ஆயிரம் ஆகியவற்றை காணவில்லை. அதனை மர்மநபர் திருடிச்சென்றிருப்பது தெரியவந்தது. இது குறித்த புகாரின் பேரில் மயிலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்