வாடகை செலுத்தாத 13 கடைகளுக்கு ‘சீல்’
நாகையில் வாடகை செலுத்தாத 13 கடைகளுக்கு நகராட்சி ஆணையர் ‘சீல்’ வைத்தார்.
நாகப்பட்டினம்:
நாகையில் வாடகை செலுத்தாத 13 கடைகளுக்கு நகராட்சி ஆணையர் ‘சீல்’ வைத்தார்.
வாடகை செலுத்தவில்லை
நாகை ஆசாத் மார்க்கெட்டில் நகராட்சி சார்பில் ரூ.40 லட்சத்தில் 14 கடைகள் கட்டப்பட்டு, மாதம் ரூ.3 ஆயிரம் நிர்ணயம் செய்து வாடகைக்கு விடப்பட்டது.
இதில் கடைகள் வைத்துள்ள 13 பேர் பல ஆண்டுகளாக வாடகை செலுத்தாமல் இருந்ததாக தெரிகிறது. இதனால் ஒவ்வொரு கடைகளுக்கும் லட்சக்கணக்கில்் வாடகை பாக்கி இருந்துள்ளது. மொத்தமாக 13 கடைகளுக்கும் ரூ.17 லட்சம் வரை வாடகை பாக்கி நிலுவையில் உள்ளதாக கூறப்படுகிறது.
13 கடைகளுக்கு ‘சீல்’
இந்த நிலையில் நகராட்சி ஆணையர் ஸ்ரீதேவி உத்தரவுபடி 13 கடை உரிமையாளர்களுக்கும் வாடகை பாக்கியை செலுத்த நோட்டீஸ் மூலமும், நேரிலும் தகவல் தெரிவிக்கப்பட்டது. ஆனால் 13 கடைகளுக்கு வாடகை செலுத்தவில்லை.
இதையடுத்து நகராட்சி ஆணையர் ஸ்ரீதேவி தலைமையில் அதிகாரிகள் நேற்று நேரில் சென்று வாடகை செலுத்தாத 13 கடைகளை பூட்டி ‘சீல்’ வைத்தனர். இது குறித்து நகராட்சி அதிகாரிகள் கூறுகையில், நகராட்சிக்கு செலுத்த வேண்டிய வாடகையை முறையாக செலுத்தவில்லை என்றால் சீல் வைப்பது உள்ளிட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றனர்.