புதுப்பேட்டை அருகே 4 கூரை வீடுகள் எரிந்து சேதம்
புதுப்பேட்டை அருகே 4 கூரை வீடுகள் எரிந்து சேதம் ரூ 10 லட்சம் பொருட்கள் தீயில் கருகின
புதுப்பேட்டை
பண்ருட்டி அருகே அழகபெருமாள்குப்பம் கிராமத்தில் கோவிந்தசாமி, வீரன், குபேந்திரன், பிரகளநாதன் ஆகியோரின் கூரை வீடுகள் நேற்று முன்தினம் மாலை ஒன்றன் பின் ஒன்றாக தீப்பிடித்து எரிந்தன.
இதுபற்றிய தகவல் அறிந்து வந்த பண்ருட்டி தீயணைப்பு துறையினர் தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர். இருப்பினும் 4 கூரை வீடுகளும், அதில் இருந்த துணிமணிகள், பீரோ, கட்டில், பிரிட்ஜ் உள்ளிட்ட வீட்டு உபயோக பொருட்கள், நகை, பணம் ஆகியவை எரிந்து சேதம் அடைந்தது. இதன் சேத மதிப்பு ரூ.10 லட்சம் இருக்கும் என கூறப்படுகிறது. இந்த தீ விபத்து குறித்து புதுப்பேட்டை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.