தண்டவாளத்தை கடக்க முயன்ற தொழிலாளி ரெயில் மோதி பலி

தண்டவாளத்தை கடக்க முயன்ற தொழிலாளி ரெயில் மோதி பலியானார்.

Update: 2022-03-19 16:26 GMT
ஜோலார்பேட்டை

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியை அடுத்த சிக்கனங்குப்பம் பகுதியை சேர்ந்தவர் மோகன் (வயது 37), கட்டிட தொழிலாளி. இவருக்கு சரளா என்ற மனைவியும், 2 மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். 

இந்த நிலையில்  மோகன் கட்டிட வேலை செய்வதற்காக குடியாத்தம் அருகே உள்ள மேல்பட்டி-வளத்தூர் ரெயில் நிலையங்களுக்கு இடையே தண்டவாளத்தை கடக்க முயன்றார். அப்போது ஜோலார்பேட்டை ரெயில் நிலையத்தில் இருந்து சென்னை நோக்கி சென்ற ரெயிலில் அடிபட்டு பரிதாபமாக உயிரிழந்தார். 

இதுகுறித்து தகவல் அறிந்ததும் ஜோலார்பேட்டை ரெயில்வே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜெயக்குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 
இதுதொடர்பாக ஜோலார்பேட்டை ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்