ஓய்வுபெற்ற காவலர் நலச்சங்க கூட்டம்

விழுப்புரத்தில் ஓய்வுபெற்ற காவலர் நலச்சங்க கூட்டம் நடந்தது.

Update: 2022-03-19 16:23 GMT
விழுப்புரம், 

தமிழ்நாடு ஓய்வுபெற்ற காவலர் நலச்சங்க கூட்டம் விழுப்புரத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் சண்முகம் தலைமை தாங்கினார். மாநில ஒருங்கிணைப்பாளர் சாமி, துணை தலைவர்கள் தீனதயாளன், பாண்டுரங்கன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் மாநில தலைவராக ஓய்வுபெற்ற போலீஸ் சூப்பிரண்டு குணசேகரன் தேர்வு செய்யப்பட்டார். 
இதில் ஓய்வுபெற்ற துணை போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார், முன்னாள் மாநில பொதுச்செயலாளர் நடனசிகாமணி, பொருளாளர் தங்கராசு மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். 
கூட்டத்தில், கடந்த 1997-ம் ஆண்டு காவல் துறையில் பணி முடித்தோருக்கு பதவி உயர்வுக்கான ஓய்வூதியம் வழங்க வேண்டும், விழுப்புரம் மாவட்ட ஓய்வு பெற்ற காவலர் நலச்சங்கத்திற்கு கட்டிடம் கட்ட அரசு இடம் ஒதுக்கி தர வேண்டும் என்பன உள்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முடிவில் மாவட்ட செயலாளர் கலிவரதன் நன்றி கூறினார்.

மேலும் செய்திகள்