வளர்ச்சி திட்ட பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம்

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம் கலெக்டர் ஸ்ரீதர் தலைமையில் நடைபெற்றது.

Update: 2022-03-19 15:57 GMT
கள்ளக்குறிச்சி, 

கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் ஊரக வளர்ச்சித்துறையின் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. இதற்கு கலெக்டா் ஸ்ரீதர் தலைமை தாங்கினார். 

கூட்டத்தில் பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின்கீழ் வீடு கட்டும் பணிகள், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்ட பணிகள், சமுதாய கழிவறை வளாகம் கட்டும் பணிகள், பிளாஸ்டிக் கழிவு பொருட்கள் மேலாண்மை, ஜல் ஜீவன் மிஷன் குடிநீர் வழங்கும் திட்டம், 15-வது மத்திய நிதிக்குழு மானியம், சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாடு திட்டம், நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு திட்டம், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம் ஆகிய திட்டங்களில் மேற்கொள்ளப்படும் பணிகளின் முன்னேற்றம் குறித்து ஆய்வு செய்யப்பட்டது. தொடர்ந்து நிலுவையில் உள்ள பணிகளை விரைவாக செயல்படுத்தி பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவர சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு கலெக்டர் ஸ்ரீதர் உத்தரவிட்டார். இதில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் மணி, ஊரக வளர்ச்சித்துறை செயற்பொறியாளர்கள், உதவி செயற்பொறியாளர்கள், மண்டல அலுவலர்கள் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்