சுப்பிரமணியசுவாமி கோவிலில் திருக்கல்யாண உற்சவம்
வந்தவாசி அருகே சுப்பிரமணியசுவாமி கோவிலில் திருக்கல்யாண உற்சவம்
வந்தவாசி
வந்தவாசி அருகே கீழ்குவளைவேடு கிராமத்தில் உள்ள வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணியசுவாமி கோவிலில் பங்குனி உத்திர திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது.
இதைத்தொடர்ந்து வேதவிற்பன்னர்கள் கோவில் வளாகத்தில் யாகசாலை அமைத்து கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம் நடைபெற்றது.
பின்னர் சீர்வரிசையுடன் வள்ளி, தெய்வானை, சுப்பிரமணியசுவாமிக்கு திருக்கல்யாணம் நடைபெற்றது. தொடர்நது மகாதீபாராதனை நடந்தது.
இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
மேலும் பக்தர்களுக்கு கோவில் சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது.