ரத்னகிரி அல்போன்சா என விற்கப்பட்ட 42 பெட்டி கர்நாடக மாம்பழங்கள் பறிமுதல்

புனேயில் ரத்னகிரி அல்போன்சா என விற்கப்பட்ட 42 பெட்டி கர்நாடக மாம்பழங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

Update: 2022-03-19 15:26 GMT
கோப்பு படம்
புனே, 
புனேயில் ரத்னகிரி அல்போன்சா என விற்கப்பட்ட 42 பெட்டி கர்நாடக மாம்பழங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
கர்நாடக மாம்பழம் பறிமுதல்
ரத்னகிரியில் விளையும் அல்போன்சா மாம்பழம் உலக புகழ் பெற்றதாகும். விலை உயர்ந்த இந்த ரக மாம்பழங்கள் பல நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. அதே நேரத்தில் அல்போன்சா என வேறு ரக மாம்பழங்களை அதிக விலைக்கு விற்றும் மோசடிகள் நடந்து வருகிறது.
இந்தநிலையில் புனேயில் ஒரிஜினல் அல்போன்சா என விற்பனைக்கு வந்த கர்நாடக மாம்பழங்களை வேளாண் உற்பத்தி சந்தை கமிட்டி (ஏ.பி.எம்.சி.) பறிமுதல் செய்து உள்ளது.
இதுகுறித்து ஏ.பி.எம்.சி. செயலாளர் மதுகாந்த் காரட் கூறுகையில், " சமீபத்தில் ரத்னகிரியில் விளைந்த ஒரிஜினல் அல்போன்சா என கர்நாடகாவில் இருந்து வந்த அல்போன்சா மாம்பழங்களை பறிமுதல் செய்தோம். மார்க்கெட் யார்டில் மொத்தம் 42 பெட்டி மாம்பழங்களை 3 மொத்த வியாபாரிகளிடம் இருந்து பறிமுதல் செய்தோம். மேலும் அவர்களுக்கு அபராதமும் விதிக்கப்பட்டது " என்றனர்.
 எப்படி இருக்கும்?
இந்தநிலையில் ஒரிஜினல் அல்போன்சா குறித்து வியாபாரி ஒருவர் கூறுகையில், " கர்நாடக அல்போன்சா மாம்பழங்கள் ஒரிஜினல் ரத்னகிரி பழங்களை விட விலை மிக குறைவு. இதேபோல தென்னிந்திய அல்போன்சா மாம்பழங்களில் பழுத்த பிறகு ரத்னகிரி பழங்கள் போல சுருக்கம் விழாது. இதேபோல கொங்கன் மாம்பழங்களில் இனிப்பு மணம் அதிகமாக இருக்கும். மேலும் அதன் தோல் காகிதம் போல மெல்லியதாக இருக்கும். கர்நாடக மாம்பழ தோல் தடிமனாக இருக்கும். " என்றார்.

மேலும் செய்திகள்