குடிப்பழக்கத்தை நிறுத்த மந்திரித்த கயிறு கட்டியதால் தொழிலாளி தற்கொலை

குடிப்பழக்கத்தை நிறுத்த மந்திரித்த கயிறு கட்டியதால் தொழிலாளி தற்கொலை செய்துகொண்டார்.

Update: 2022-03-19 14:28 GMT
தொண்டி, 
தொண்டி புதிய பஸ் நிலையம் அருகே உள்ள காந்தியார் வீதியைச் சேர்ந்தவர் மூர்த்தி (வயது 50). இவர் பந்தல் அமைக்கும் தொழிலில் ஈடுபட்டு வந்துள்ளார். அளவுக்கு அதிகமாக குடிக்கும் பழக்கம் உடைய மூர்த்தி  குடித்துவிட்டு வேலைக்கு செல்வதில்லையாம். இதனால் வீட்டில் பண கஷ்டம் இருந்து வந்துள்ளது.அதனைத் தொடர்ந்து அவரது குடும்பத்தினர் மூர்த்தியை கோவிலுக்கு அழைத்து சென்று மந்திரித்து கையில் கயிறு கட்டி உள்ளனர். மந்திரித்த கயிறு கட்டி இருப்பதால் குடிக்க கூடாது என்றும் குடித்தால் உயிருக்கு ஆபத்து ஏற்படும் என கூறியதை தொடர்ந்து அவர் ஒருநாள் குடிக்காமல் இருந்துள்ளார். இதனால் மனதளவில் பெரிதும் பாதிக்கப்பட்ட மூர்த்தி  தொண்டி புதுக்குடி கடற்கரை  அருகில் உள்ள ஒரு மரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.இதனை அறிந்த தொண்டி போலீ சார் மூர்த்தியின் உடலை கைப்பற்றி திருவாடனை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்த புகாரின் அடிப்படையில் போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகேசன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்.

மேலும் செய்திகள்