பேரூர் அருகே பூண்டி வெள்ளியங்கிரி மலையேறிய பக்தர் உயிரிழந்தார்

பேரூர் அருகே பூண்டி வெள்ளியங்கிரி மலையேறிய பக்தர் உயிரிழந்தார்

Update: 2022-03-19 14:20 GMT

பேரூர்

பேரூர் அருகே பூண்டி வெள்ளியங்கிரி மலையேறிய பக்தர்  உயிரிழந்தார்.

5-வது மலையில் மயங்கிய பக்தர்

கோவை செல்வபுரம் சரோஜினி நகர் 2-வது வீதியை சேர்ந்தவர் சுகுமார் கண்ணன் (வயது 33). இவர், ரங்கேகவுடர் வீதியில் பலகார கடையில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். 

இவர் தனது தாயார் கந்தசெல்வி, தங்கை சுகுமாரி, தம்பி மாதவன் ஆகியோருடன் வசித்து வந்தார்.

இந்த நிலையில் சுகுமார்கண்ணன் நேற்று முன்தினம் பேரூைர அடுத்த பூண்டி வெள்ளியங்கிரி அடிவாரம் வந்து மலையேற தொடங்கினார். 

அவர், ஒவ்வொரு மலையாக கடந்து 5-வது மலை ஏறிக் கொண்டு இருந்த போது தொடர்ந்து மலையேற முடியாமல் சிரமப்பட்டார். இதனால் களைப்படைந்த அவர் தரையில் அமர்ந்தார். சிறிது நேரத்தில் மயங்கி விழுந்தார்.

பரிதாப சாவு

இந்த நிலையில் நேற்று காலை 11 மணியளவில் 5-வது மலையில் ஏறிக் கொண்டு இருந்த பக்தர்கள் சிலர், ஒருவர் மயங்கி கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். 

அவர்கள், சுகுமார்கண்ணனின் உறவினர்கள் மற்றும் வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். 

இதையடுத்து, 5-வது மலையில் இருந்து சுகுமார்கண்ணனை தூக்கிக் கொண்டு நேற்று மாலை 4.45 மணிக்கு அடிவாரத்துக்கு கொண்டு வந்தனர்.

 அங்கிருந்த 108 ஆம்புலன்ஸ் டாக்டர்கள் பரிசோதித்து பார்த்து விட்டு அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். 

விசாரணை

இதைத்தொடர்ந்து அவரின் உடல் உடல் பிரேத பரிசோதனைக்காக, கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இது குறித்து ஆலாந்துறை போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

விசாரணையில், சுகுமார் கண்ணன் 10 ஆண்டுகளுக்கு முன்பு மலை யேறி உள்ளார். ஆனால் அவருக்கு கடந்த 3 ஆண்டுகளாக சர்க் கரை நோய் இருந்து உள்ளது. 

அதற்காக இன்சுலின் ஊசி போட்டு வந்து உள்ளார். ஆனால் ஊசி மருந்து எடுக்காமல் மலையேறிய நிலையில், மலையில் நிலவிய கடும்குளிர், நோய் பாதிப்பு போன்ற காரணங் களால் மூச்சுத்திணறல் ஏற்பட்டு இறந்தது தெரிய வந்தது. 

சிகிச்சை வசதி இல்லை

இது குறித்து வனத்துறையினர் கூறுகையில், மலையின் மேல் பக்தர்க ளுக்கு சிகிச்சை அளிக்க வசதிகள் இல்லை. எனவே உடல் ஆரோக்கி யத்துடன் இருக்கும் பக்தர்கள் மட்டுமே வெள்ளியங்கிரி மலையேற வேண்டும். 

நோய் பாதிப்பு உள்ளவர்கள் மலையேறுவதை தவிர்த்து அடிவாரத்திலேயே சாமி தரிசனம் செய்யலாம் என்றனர்.

மேலும் செய்திகள்