கோவை மாவட்டத்தில் குடிபோதையில் வாகனம் ஓட்டியதாக ஒரே நாளில் 75 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது

கோவை மாவட்டத்தில் குடிபோதையில் வாகனம் ஓட்டியதாக ஒரே நாளில் 75 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது

Update: 2022-03-19 14:17 GMT

கோவை

கோவை மாவட்டத்தில் குடிபோதையில் வாகனம் ஓட்டியதாக ஒரே நாளில் 75 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

கொரோனா தொற்று

குடிபோதையில் வாகனம் ஓட்டி வருபவர்களை போலீசார் பிடித்து அதற்குரிய கருவியில் வாயால் ஊத சொல்லி சோதனை செய்வார் கள். கொரோனா காரணமாக அந்த சோதனை முறை தவிர்க்கப்பட் டது. 

இதனால் வாகனம் ஓட்டும் மதுபிரியர்கள் சிக்காமல் தப்பினர். அதிக போதையில் வருபவர்களை மட்டுமே போலீசார் அடையாளம் கண்டு வழக்குப்பதிவு செய்யும் நிலை இருந்தது.

கோவை மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு தற்போது வெகுவாக குறைந்து விட்டது. எனவே குடிபோதையில் வாகனம் ஓட்டுபவர்களை கண்டறிந்து போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். 

கோவை மாவட்டத்தில் மது குடித்து விட்டு வாகனம் ஓட்டியதாக நேற்றுமுன் தினம் ஒரே நாளில் 75 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

ஆல்கஹால் அளவு

இது குறித்து போலீசார் கூறுகையில், கொரோனா பரவல் காரண மாக குடிபோதையில் இருப்பவர்களை வாயால் ஊத சொல்வது தவிர்க்கப்பட்டது.

 தற்போது கொரோனா தொற்று குறைந்ததால் குடி போதையில் வாகனங்கள் ஓட்டுபவர்களை கண்டறிந்து வழக்குப்பதிவு செய்து வருகிறோம். 

இதற்காக கோவை மாவட்ட போலீசாருக்கு 50 பிரீத் அனலைசர் கருவி வழங்கப்பட்டு உள்ளது. 

அதன் மூலம் மது குடித்தவரின் மூச்சுக்காற்றில் ஆல்கஹால் அளவை கண்டறிந்து வழக்குப்பதிவு செய்யப்படும் என்றனர்.

கோவை மாநகர பகுதியில் குடிபோதையில் வாகனங்கள் இயக்குபவர்கள் மீது கடந்த மாதம் முதல் வழக்குப்பதிவு செய்யப்பட்டு வருகிறது. 

மேலும் அதிவேகமாக வாகனங்களை ஓட்டுபவர்களை கண்டறிய போக்குவரத்து போலீசாருக்கு ஸ்பீடு கன் வழங்கப்பட்டு உள்ளது.

மேலும் செய்திகள்