பூச்சி மருந்தை குடித்த மாணவன் சாவு

குளிர்பானம் என நினைத்து பூச்சி மருந்தை குடித்த மாணவன் பரிதாபமாக உயிரிழந்தான்.

Update: 2022-03-19 13:47 GMT
தொண்டி, 
தொண்டி அருகே உள்ள வட்டானம் உப்பூரணி பகுதியைச் சேர்ந்தவர் அங்குசாமி. இவரது மகன் கவின் (வயது 14). வட்டானத்தில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்துள்ளான். சம்பவத்தன்று கவின் தலை சுற்றுவதாக கூறி வாந்தி எடுத்துள்ளான்.இதுகுறித்துஅவரது பெற்றோர் கவினிடம் கேட்டபோது தாகம் எடுத்ததால் குளிர்பான பாட்டிலில் இருந்ததை குடித்ததாக கூறியுள்ளான். அதில் தென்னை மரத்திற்கு பூச்சி மருந்து கலந்து வைக்கப் பட்டு இருந்தது தெரியவந்தது. உடனே கவினை ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி கவின் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த எஸ்.பி. பட்டினம் போலீசார் கவினின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோத னைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து கவினின் தாயார் கற்பகவள்ளி (வயது33). எஸ்.பி.பட்டினம் போலீஸ் நிலையத் தில் அளித்த புகாரின் பேரில் தொண்டி போலீஸ் இன்ஸ் பெக்டர் முருகேசன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்.

மேலும் செய்திகள்