தேசிய விளையாட்டு போட்டியில் மாணவர்கள் சாதனை
தேசிய விளையாட்டு போட்டியில் மாணவர்கள் சாதனை படைத்துள்ளனர்.;
ராமநாதபுரம்,
ராமநாதபுரம் அருகே வாணி கிராமத்தில் உள்ள வேலு மாணிக்கம் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி பிளஸ்-2 மாண வர்கள் கரண், காமட்சி கண்ணன். இவர்கள் 2 பேரும் மாநில அளவிலான எறிபந்து போட்டியில் தமிழ்நாடு அணி சார்பில் கலந்து கொண்டு வெற்றி பெற்று தேசிய போட்டிக்கு தகுதி பெற்றனர். அதன்படி டெல்லியில் நடைபெற்ற தேசிய அளவிலான எறிபந்து போட்டியில் கலந்து கொண்டு இந்திய அளவில் 3-ம் இடம் பெற்று வெண்கல பதக்கம் வென்று உள்ளனர். தேசிய அளவிலான விளையாட்டு போட்டியில் வெற்றி பெற்று சாதனை படைத்த மாணவர்களின் விளை யாட்டுத்திறனை ஊக்குவித்து பள்ளி தாளாளர் கதிரேசன் கல்வி உதவித்தொகை வழங்கி பாராட்டினார். அறக்கட்டளை உறுப்பினர் டாக்டர் ராஜிவ், பள்ளி முதல்வர் பரிமளா, ஒருங் கிணைப்பாளர் மலைமேல் கண்ணன், ஆசிரியர்கள் மாண வர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.