குளிர்பானத்தில் விஷம் கலந்து குடித்து கட்டிட மேஸ்திரி தற்கொலை

குளிர்பானத்தில் விஷம் கலந்து குடித்து கட்டிட மேஸ்திரி தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2022-03-19 13:36 GMT
ராணிப்பேட்டை

ராணிப்பேட்டை மாவட்டம், சிப்காட் அருகே உள்ள லாலாபேட்டையை சேர்ந்தவர் சரத் (வயது 26), கட்டிட மேஸ்திரி. இவரது மனைவி லில்லி. இவர்களுக்கு திருமணமாகி 2 வருடம் ஆகிறது. இவர்களுக்கு நவநீதகிருஷ்ணன் என்ற 9 மாத ஆண் குழந்தை உள்ளது. கணவன்- மனைவிக்கு இடையே குடும்பத்தகராறு இருந்து வந்துள்ளது. 
இந்தநிலையில் சரத் குளிர்பானத்தில் விஷத்தை கலந்து குடித்துள்ளார். இதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

 இதுகுறித்து தகவலறிந்த சிப்காட் போலீசார் சம்பவ இ’த்திற்கு சென்று பிணத்தை கைப்பற்றி வேலூர் அரசு மருத்துவனைக்கு பிரேத பரிசோதனக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


மேலும் செய்திகள்