கோத்தகிரியில் லேசான சாரல் மழை

கோத்தகிரியில் லேசான சாரல் மழை;

Update: 2022-03-19 13:18 GMT
கோத்தகிரி

கோத்தகிரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக கடும் வெப்பமான காலநிலை நிலவி வருகிறது. இதனால் ஆங்காங்கே வனப்பகுதிகளில் காட்டுத்தீ ஏற்பட்டு வருகிறது. மேலும் வனப்பகுதியில் பசுந்தீவன தட்டுப்பாடு ஏற்பட்டு வருவதால், வனவிலங்குகள் உணவு மற்றும் தண்ணீர் தேடி வனப்பகுதியை விட்டு வெளியே வர தொடங்கி உள்ளன.

இந்தநிலையில் கோத்தகிரி பகுதியில் இன்று மதியம் திடீரென காலநிலை மாறி லேசான சாரல் மழை பெய்தது. இதனால் வெயிலின் தாக்கத்தால் ஏற்பட்ட உஷ்ணம் தணிந்ததுடன் இதமான காலநிலை நிலவியது. மீண்டும் போதுமான மழை பெய்தால், காட்டுத்தீ ஏற்படுவது தடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் செய்திகள்