வனப்பகுதியில் திடீர் காட்டுத்தீ

வனப்பகுதியில் திடீர் காட்டுத்தீ

Update: 2022-03-19 13:18 GMT
கோத்தகிரி

கோத்தகிரி பகுதியில் கடந்த சில வாரங்களாக வறட்சியான காலநிலை இருந்து வருகிறது. இதனால் வனப்பகுதிகளில் உள்ள மரம், செடி, கொடிகள் காய்ந்து இருப்பதால், காட்டுத்தீ ஏற்பட்டு வருகிறது. இந்தநிலையில் நேற்று இரவு 9.30 மணியளவில் கோத்தகிரி அருகே உள்ள ேபட்டலாடாவில் இருந்து கொணவக்கரை செல்லும் சாலையில் உள்ள வனப்பகுதியில் திடீர் காட்டுத்தீ ஏற்பட்டது. 

இதை கண்ட அப்பகுதி மக்கள், கோத்தகிரி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் தீயணைப்பு நிலைய அலுவலர் கருப்பசாமி, சிறப்பு நிலைய அலுவலர் மாதன் ஆகியோர் தலைமையில் தீயணைப்பு வீரர்கள், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தண்ணீரை பீய்ச்சியடித்து தீயை அணைத்தனர். 

மேலும் செய்திகள்