பரமக்குடி முத்தாலம்மன்கோவில் பங்குனி திருவிழா

பரமக்குடி முத்தாலம்மன்கோவில் பங்குனி திருவிழாவில் பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர்

Update: 2022-03-19 12:40 GMT
பரமக்குடி, 
பரமக்குடி முத்தாலம்மன்கோவில் பங்குனி திருவிழாவில் பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர்.
காப்பு கட்டு
பரமக்குடி முத்தாலம்மன் கோவில் பங்குனித் திருவிழா கடந்த 11-ந் தேதி காப்பு கட்டுடன் தொடங்கி நடந்து வருகிறது. அதையொட்டி முத்தாலம்மன் ஒவ்வொரு நாளும் வெவ்வேறு வாகனத்தில் எழுந்தருளி வீதிவலம் வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்து வருகிறார். 8-ம் நாள் திருவிழா வான நேற்று அக்னிச்சட்டி, தீச்சட்டி, கரும்பாலைத் தொட்டி எடுக்கும் நிகழ்ச்சி நடந்தது. 
ஆயிர வைசிய இளைஞர் சங்கம், ஆயிர வைசிய சமூக நலச் சங்கம் சார்பில் வைகை ஆற்றில் இருந்து ஏராளமான பக்தர்கள் தங்களது நேர்த்திக் கடனாக அவற்றை எடுத்து வந்தனர். நகரின் முக்கிய வீதிகளின் வழியாக வந்து பக்தி பரவசத்துடன் ஆடி கோவிலை வந்தடைந்தனர். பின்னர்  தேரோட்டம் நிகழ்ச்சி நடந்தது. மின்னொளி தீப அலங் காரத்தில் அமைக்கப்பட்டிருந்த தேரில் முத்தாலம்மன் எழுந்தருளினார். பக்தர்கள் வடம் பிடித்து தேரை இழுத்தனர்.
வழிபாடு
 அது சமயம் அங்கு கூடியிருந்த ஏராளமான பக்தர்கள் ஓம் சக்தி, பராசக்தி என கோஷமிட்டபடி அம்பாளை வழிபட்ட னர். பின்பு தேர் கோவிலை சுற்றி நான்கு ரத வீதிகளில் வலம் வந்து மீண்டும் கோவிலை அடைந்தது. இதில் பரமக்குடி, மதுரை, ராமநாதபுரம், தேவகோட்டை, காரைக்குடி உள்பட பல்வேறு ஊர்களில் இருந்து ஏராளமானோர் வந்து கலந்துகொண்டு அம்மனை வழிபட்டனர்.

மேலும் செய்திகள்